தமிழகத்தில் நீட் ரத்து மோசடி போராட்டம் - மாணவர் - மக்கள் ஆதரவு இல்லை. கலக்கத்தில் ஆளும் கட்சி

இன்று இங்கு தலையாய பிரச்சனையாக கட்டமைக்கப்படுவது நீட் தேர்வு! யார் சரி யார் தவறு என்பதைவிட ஏன் இது இங்கு உயிர்போகும்(ஆம் தற்கொலை செய்துகொண்டவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டுதான்), உண்மையில் நீட் இங்கு தலைப்பு செய்தியாகி பல வாரங்களாக நீடித்து, அதன்பால் ஏதாவது ஒரு சார்புநிலை எடுக்க நாம் தள்ளப்படுவதேன்?


தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு அரசியல் பின்னணி 8 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் 12(+2) எழுதுவது 8 லட்சம் மாணவர்கள் மொத்த மருத்துவ இடங்கள் ௨023ல் அரசு கல்லூரி - 5225 தனியார் கல்லூரி - 3350 தமிழக தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மற்ற மாநில (தெலுங்கு & ஹிந்தி) மாநில மாணவர் 60 - 80% நீட் வந்த பிறகு அனைத்து மருத்துவ கல்லூரியிலும் தமிழக மாணவர் - 85% கட்டாயம். அதாவது தமிழக கல்லூரிகளிலே பிற மாநில மாணவருக்கு சீட் விற்[அது கட்டுப்படுத்தப் பட்டது. மீதம் 15% சீட் அகில இந்திய அளவில். தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மண்ட் 4 ஆண்டு கட்டணம் ரூ.1 கோடி+ நீட் மூலம் சேர்ந்தால் இதில் பாதி -ரூ.50 லட்சம் (மத்திய அரசு மேலும் குறைக்க ஆணை) நடுத்தர - ஏழை மாணவர் தனியார் கல்லூரியைத் தவிர்த்து அகில இந்திய அளவில் அகில இந்திய அரசு கல்லூரி 15% சீட் மட்டுமே 52000, இதிலும் திறமையான தமிழக மாணவர் தேர்வு பெற்று சேர இயலும்
தனியார் மருத்துவ கல்லூரி - 3350 இடங்களில் பாதியை மேனேஜ்மண்ட் கோட்டா என ரொக்கமாக 1 கோடிவரை டொனேஷன் மூலம் விற்றனர். அது தவிர பீஸ். தற்போது டொனேஷன் கொடுத்தாலும் நீட் பாஸ் கட்டாயம். எனவே ஆண்டிற்கு1650 கோடி நஷ்டம்



நீட் தேர்வு: ஒரு சுருக்கமான வரலாறு! -நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகவும் குலாம் நபி ஆசாத் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தபோது, மருத்துவப் படிப்புகளுக்கு நாடு தழுவிய ஒரு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மன்மோகன் அரசு தீர்மானித்தது. இது குறித்த ஒரு அறிவிப்பாணையை டிசம்பர் 2010ல் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) வெளியிட்டது. அதன்படி 2013ல் முதன் முதலில் நீட் தேர்வு இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. முதல் நீட் தேர்வு 2013 மே மாதத்தில் நடைபெற்றது.
தனியார் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இத்தேர்வை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன. அப்போதைய இந்தியாவின் தலைமை நீதிபதி அல்டாமிஷ் கபீர் தலைமையிலான அமர்வு நீட் தேர்வு செல்லாது என்று மூன்றுக்கு இரண்டு என்ற பெரும்பான்மையில் தீர்ப்பளித்தது. அல்டாமிஷ் கபீர் பணி ஒய்வு பெற்ற அதே நாளில் இத்தீர்ப்பு வழங்கப் பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து 2013 அக்டோபரில் இந்திய மெடிக்கல் கவுன்சில் (MCI) மேல்முறையீடு செய்தது. டாக்டர் மன்மோகன்சிங் அரசு நீட் தேர்வு வேண்டும் என்று உறுதியாக இருந்தது.
மேல்முறையீட்டில் ஏப்ரல் 2016ல் அரசமைப்புச் சட்ட அமர்வு (CONSTITUTIONAL BENCH) நீட் தேர்வு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு குறித்த மசோதா 2016ல் சமர்ப்பிக்கப் பட்டது. மக்களவையில் 2016 ஜுலை 18ல் நீட் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் ஆகஸ்ட் 1ல் நீட் மசோதா நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களிலும் 2016 ஆகஸ்டு 8ல் கையெழுத்திட்டார். அன்று முதல் நீட் தேர்வு இந்தியாவில் சட்டமானது. அதாவது நீட் தேர்வுக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கப் பட்டது.







இங்கு மக்கள்தொகை சுமார் 8 கோடி, வருடத்திற்கு +12 எழுதும் மாணவர்கள் 8.76 லட்சம் பேர், இதில் நீட் தேர்வு எழுதுபவர்கள் மட்டும் 1.44 லட்சம் பேர், இதில் 79 ஆயிரம் பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர், எப்படி +12 படித்து பாஸ் செய்த அனைவருக்கும் நினைத்த கல்லூரியில் நினைத்த பாடத்தில் இடம் கிடைக்காதோ அதுபோல் இங்கு அனைவரும் மருத்துவர் ஆகப்போவதில்லை! மொத்தமாக 12000 இடங்கள்(மோதி அரசு வரும்முன் இதில் பாதிகூட இல்லை) இதில் 69% இட ஒதிக்கீடு போக, 3700 இடங்களுக்குதான் இத்தனை அலப்பரை! அதாவது 0.4% மாணவர்களின் பிரச்சனை இது, ஆனால் இங்கு சமூக விவாதங்களில், அரசியல்வாதிகளின் பேச்சுகளில், ஊடகங்களில் தலைப்புகளில் என பொதுமக்களின் சிந்தனையில் திட்டமிட்டு தலைபோகும் பிரச்சனையாக ஏற்றப்படுகிறது!
இந்தியா முழுவதும் ஒரு பிரச்சனை தலைப்பு செய்தியாக ஓடும், இங்கு மட்டும் தனி ராகம் பாடிக்கொண்டிருப்பர், நீங்களே பாருங்கள், ஆங்கில, மலையாள, தெலுங்கு கன்னட என ஒப்பிட்டால் தெரியும்! ஏன் இங்குமட்டும் தனி உலகத்தில் வாழ்வதுபோல் கட்டமைக்கப்படுகிறது?
தமிழகத்தில் இதற்கு முன் இருந்த தலைப்பு செய்திகள் எது என எண்ணிப்பாருங்கள்..
இலங்கை தமிழர் பிரச்சனை
காவேரி பிரச்சனை
ஹிந்தி எதிர்ப்பு பிரச்சனை
ஜாதி மோதல் பிரச்சனை
மத சிறுபான்மையினர் பிரச்சனை
தமிழர் போராளி என பட்டம் கட்டப்பட்ட கொலைகார கொலையாளி வீரப்பன், ஏன் ஆட்டோ சங்கருக்கு கூட கதாநாயக பிம்பம் கொடுத்த இந்த ஊடகங்கள் எப்படி இதை செய்கிறது?!
உதாரணமாக இலங்கையில் 11.2% தான் ஈழத்தமிழர்கள், அதாவது மொத்தமாக 20 லட்சம் பேர்,இதில் நேரடியாக சிங்கள இனவெறியுடன் மோதல் போக்கை கொண்டவர்கள் லட்சம்பேரை தாண்டாது,
தமிழகத்தில் உள்ள ஒரு சிறு நகரமான உடுமலையோ கோவில்பட்டியோகூட இதைவிட பெரியதொகை உள்ள இடங்கள், ஏன் மொத்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை இங்குள்ள ஒரு ஜாதி மக்களின் எண்ணிக்கைகூட கிடையாது, இன்னும் பச்சையாக சொன்னால் தமிழகத்தில் 25% உள்ள தாய்மொழயாக பிறமொழி பேசும் மக்களின் எண்ணிக்கை இரண்டு கோடி! இலங்கை தமிழர்களைவிட 10 மடங்கு அதிகம், ஆனால் ஈழம் பேசப்பட்டதுபோல் ஆயிரத்தில் ஒருமுறைகூட இங்கு இவர்களின் பிரச்சனைகள் பேசுபொருளாகவில்லை, இதற்காக இவர்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்றோ,அதற்கு போராடவில்லை என்றோ உங்களுக்கு தோன்றினால், அதுதான் இந்த பதிவின் சாரம்! ஏன் இது பேசுபொருளாகவில்லை? அடுத்த நாட்டில் நடப்பது தமிழரின் தலையாய பிரச்சனையாக கட்டமைக்கபட்டு ஒரு தலைமுறையின் தினசரி செய்தியாகி, மொத்த தமிழகமும் யாழ்பாணத்தில் வாழ்ந்தோம்!
இதுபோல்தான் இங்கு புழங்கும் அனைத்து தலைப்பு செய்திகளும்! அனைத்து செய்திகளிலும் அடிநாதமாக இருப்பது மொழி இன அடையாள அரசியல் மட்டுமே
சமூகத்தின் மொத்த சிந்தனையும் தமிழகத்தின் மொத்த பொதுபுத்தியையும் குத்தகைக்கு எடுத்துள்ள ஊடகங்களில் இதை தீர்மானிப்போரின் எண்ணிக்கை நூறுபேரை தாண்டாது என்பதுதான் வேடிக்கை! 8 கோடி தமிழர்களில் 100 பேர்தான் உங்கள் பொது உணர்வுகளின் எஜமானர்கள் என்பதுதான் நிதர்சனம்!
ஆம் நம்மை ஜோம்பிகளாக வார்த்தெடுத்து தனியுலகில் வாழ பழக்கியுள்ள அந்த நூறுபேர் உண்மையில் அறிவுஜீவிகள்தான்!

https://vskdtn.org/2021/07/01/neet-eaxam-history/





 

Comments

Popular posts from this blog

Dying Christianity