G+ 3 தளம் வணிக கட்டட அனுமதி 1990ல்பெற்று, விதியை மீறி 10 தளங்கள் கட்டிய ஜன்ப்ரியா பில்டர்ஸ் கட்டிட 7 மாடிகளை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை திநகர் பாண்டிபஜாரில் தரை G+ 3 தளம் வணிக கட்டட அனுமதி 1990ல்பெற்று, விதியை மீறி 10 தளங்கள் கட்டிய ஜன்ப்ரியா பில்டர்ஸ் கட்டிட 7 மாடிகளை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 3 ADDED : பிப் 18, 2025 https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-chennai/order-to-demolish-and-demolish-violating-buildings-in-the-city-mercy-and-mercy-should-not-be-merciful-for-great-investment-/3857836 சென்னை : தி.நகரில் விதிமீறி கட்டப்பட்ட எட்டு மாடி கட்டடத்தை, எட்டு வாரங்களில் இடிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'பெரும்முதலீடு என்பதற்காக வீதிமீறல்கள் செய்தோர் மீது இரக்கம், கருணை காட்டக் கூடாது' என, தெளிவுபடுத்திய நீதிமன்றம், 'சட்ட விரோதமாக கட்டப்பட்ட மற்ற கட்டடங்கள் மீது, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கண்டிப்புடன் கூறியுள்ளது. சென்னை, தி.நகர் பாண்டிபஜாரில், தரைத்தளம் மற்றும்மூன்று தளங்களுடன் கூடிய வணிக கட்டடம் கட்டுவதற்கு, பெங்களூரைச் சேர்ந்த, 'ஜன்ப்ரியா பில்டர்ஸ்' என்ற நிறுவனம், 1990 பிப்., 9ல் அனுமதி பெற்றது. ஆனால், அனுமதியை மீறி, 10 தளங்கள் வர...